எஸ்.பி வேலுமணியை எதிர்த்தால் காணாமல் போய்விடுவாய்.. வானதியை எச்சரித்த சி.பி இராதாகிருஷ்ணன்.!! - Seithipunal
Seithipunal


எல்லா நேரத்திலும் கூட்டணி கிடைக்கும் என்ற என்ற நம்பிக்கை இல்லை என்றும், எஸ்.பி வேலுமணியை எதிர்த்தால் வானதி நீயும் காணாமல் போய்விடுவாய் என்றும் ஜார்கண்ட் ஆளுநரும் முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவருமான சி.பி ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா அரங்கில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு பாராட்ட விழா நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் "வானதி போன்ற தலைவர்கள் எல்லாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் மட்டும் தேர்தலில் வெற்றி பெற்று விட முடியாது. வேலுமணி போன்று நீங்களும் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

நானெல்லாம் பிராக்டிகலா இல்லாததால் தான் இரண்டு முறை வெற்றி பெற்றாலும் மூன்று முறை தோற்றேன். வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை, புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை என பாடிய சந்திரபாபுவும் காணாமல் போனார் நாமளும் காணாமல் போய்விடுவோம். அதனால ரொம்ப ஜாக்கிரதையாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். எஸ்.பி வேலுமணியுடன் பயணிக்கும் வரை உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எதிரணியில் இருந்தினால் நீயே காணாமல் போய்விடுவாய். வெற்றியாளர்கள் மட்டும்தான் நன்மை செய்ய முடியும்" என வானதி சீனிவாசனை எச்சரிக்கும் வகையில் சி.பி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cp RadhaKrishnan said without SPVelumani Vanathi would not won


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->