பிரபல அரசியல் கட்சி தலைவர் கவலைக்கிடம்! அதிர்ச்சியில் தொண்டர்கள்! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (வயது 72) கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாச பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். 

தொடர்ந்து அவரின் உடல்நிலை மோசமானதாகவும், இதனால் செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அக்கட்சி அதிகாரபூர்வகமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

24 மணி நேரமும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த செய்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM Sitaram Yechuri  health condition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->