கொள்ளை அடிப்பதில் கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்.. சி.வி சண்முகம் குற்றச்சாட்டு..!!
CVe Shanmugam criticized MK Stalin govt
விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி சண்முகம் கலந்து கொண்டார். அப்பொழுது செய்தியாளரை சந்தித்த அவர் "ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கின்ற நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளிவந்ததில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் 30,000 கோடிக்கு மேல் பணத்தை சேர்த்து வைத்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
கொள்ளையடித்த பணத்தை பற்றி பேசி ஆடியோ குறித்து ஏன் முதல்வர் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆடியோ வெளியிட்டவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஆண்டு மூலதன செலவு என்பது 36 ஆயிரம் கோடி. இவர்கள் கொள்ளை அடித்து இருப்பது 30 ஆயிரம் கோடி. பட்ஜெட்டில் 2 லட்சத்து 70 ஆயிரம் கோடியில் 30 ஆயிரம் கோடியை ஸ்டாலின் தலைமையிலான அரசு கொள்ளை அடித்துள்ளது.
கொள்ளையடிப்பதில் கருணாநிதியை மிஞ்சி இருக்கிறார் மு.க ஸ்டாலின். திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் சட்டம் கொண்டு வந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் 12:00 மணி நேரம் வேலை மாற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. பாஜக அதிமுக கூட்டணியில் இருந்த போதும் அவர்கள் கூறுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். திமுக அரசு கோமாளி அரசாக செயல்பட்டு வருகிறது. சட்டம் போட வேண்டியது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் உடனே பின்வாங்குவதை தான் ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து கொண்டிருக்கிறது" என குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
CVe Shanmugam criticized MK Stalin govt