சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு!! - Seithipunal
Seithipunal


பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிறிஸ்துவ மதம் குறித்து அவதூரான கருத்துக்களை தெரிவித்ததாக கனல் கண்ணன் மீது நாகர்கோயில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் திட்டு விளை பகுதியை சேர்ந்த ஜோசப் பெனடிக்ட்  என்பவர் கனல் கண்ணன் மீது புகார் அளித்துள்ளார். இவர் திமுக ஜடி பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார்.

அந்த புகாரில், இந்து முன்னணி கட்சியை சேர்ந்த சினிமா ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணன் என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான் என்று ஒரு கிறிஸ்தவ மத போதகர் பெண்ணிடம் ஆடுவது போன்ற ஒரு வீடியோவை எடிட்டிங் செய்து பின்னணியில் தமிழ் இசையுடன் பதிவிட்டுள்ளார்.  மத கலவரத்தை தூண்டும் நோக்கத்தோடு பதிவிட்டுள்ள கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cybercrime police registered case against Kanal Kannan a film fighting coach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->