கர்நாடகா சார்பில் டி கே சிவக்குமார் பங்கேற்பார்!!! தொகுதி மறு சீரமைப்பு கூட்டம் சார்பாக சித்தராமையா கூறியது!!! - Seithipunal
Seithipunal


கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை,தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மற்றும் எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

அதற்குப்பின்பு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில முக்கியமான விஷயங்களை பேசினார். அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் எழுதியிருந்ததாவது, "மாநில சுயாட்சி மற்றும் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதம் எனக்குக் கிடைத்தது.மார்ச் 22 அன்று நான் வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார்.

இந்த கூட்டாட்சி கொள்கைகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

D K Shivakumar will participate on behalf of Karnataka Siddaramaiah said on behalf of the constituency realignment meeting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->