டெல்லி சட்டமன்ற தேர்தல்: விளக்குமாறால் ஆம் ஆத்மியை டெல்லி மக்கள் அகற்றுவார்கள் - அமித் ஷா - Seithipunal
Seithipunal


டெல்லியில் வரும் பிப்ரவரி 5 அன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்திய அரசின் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்முனை போட்டியில் இறங்கியுள்ளன. தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், முக்கிய தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி பாஜகவுக்காக பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கிடையே, நேற்று முஸ்தபாபாத் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறியதாவது:முதல் G – கொடலே வாலி சர்கார் ஊழல்களில் ஈடுபடும் அரசு,இரண்டாவது G – குஸ்பைதியோன் கோ பனா தேனே வாலி சர்க்கார் ஊடுருவுபவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசு

"மூன்றாவது G" – "கப்லே கர்னே வாலி சர்க்கார்" (நாட்டை கடனில் மூழ்கடிக்கும் அரசு)

"மக்கள் இந்த முறை 'ஜாடு' (துடைப்பம்) மூலம் ஆம் ஆத்மி கட்சியை நிராகரிப்பார்கள்" என அமித் ஷா தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi assembly elections People of Delhi will eliminate Aam Aadmi Party if the lamp is changed Amit Shah


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->