டெல்லி மாநகராட்சியை கைப்பற்ற போவது யார்? ஆம் ஆத்மி - பாஜகவினரிடையே கடும் போட்டி.. இன்று வாக்கு எண்ணிக்கை.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கும் கடந்த டிசம்பர் 4ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று (டிசம்பர் 7ஆம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதற்காக தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பில் அதிக வார்டுகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றும் என வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi corporation election results today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->