2ஜி வழக்கை இனி தள்ளி போட முடியாது.! தேதி குறித்த டெல்லி உயர் நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


2ஜி வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என டெல்லி உயர் நீதிமன்றம் என அறிவிப்பு.!

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டர் மீது தனியார் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதால் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக மத்திய தணிக்கை குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீண்ட வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் விசாரணை தொடங்கியது. 

இந்த நிலையில் மீண்டும் இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ தரப்பில் இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் மாகம் இறுதிவரை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், எதிர் மனுதாரர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதால் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருக்கக் கூடாது என எதிர் மனுதாரர் வாதிட்டதால் இந்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு மட்டுமே ஒத்திவைக்க முடியும் என கூறிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DelhiHC announced that 2G spectrum case heard daily from Aug28


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->