தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்,  தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்தார். 

தொடர்ந்து அப்போது அவரின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

மேலும், சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு, ஊரக கடன் ஆகிய துறைகள் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினர் குறை எழுப்பினர்.

இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதலமைச்சராகிறார்.

ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது. மேலும், நாளை பிற்பகல் 3:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deputy Cm Udhayanidh Stalin DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->