ஸ்தம்பித்த சென்னை - தெறிக்க விட்ட பா. ரஞ்சித் - ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு கவனம் ஈர்த்த பேரணி..!!
Director Pa Ranjith Led The Rally in Chennai Asking Justice For Armstrong Murder
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் மர்ம நபர்களால் கடந்த ஜூலை 5ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த செம்பியம் போலீசார் இந்த வழக்கில் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து கைதான 11 போரையும் போலீசார் 5 காவலில் எடுத்து விசாரித்து வந்த நிலையில், முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்பவர் தப்பியோட முயற்சித்ததால் போலீசாரால் என்கவுட்டர் செய்யப்பட்டார். மேலும் இந்தக் கொலையில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் தமாக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்தும், நீதி கேட்டும் இயக்குனர் பா. ரஞ்சித் தலைமையில் அவரது 'நீலம் பண்பாட்டு மையம்' சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ரமடா ஹோட்டல் எதிரில் துவங்கிய கண்டனப் பேரணி ராஜரத்தினம் மைதானம் வரை சென்று நிறைவடைய உள்ளது.
இந்த மாபெரும் கண்டனப் பேரணியில் இயக்குனர் பா. ரஞ்சித், நடிகர்கள் மன்சூரலிகான், தினேஷ் ஆகியோரும், மற்றும் பொதுமக்கள், மாணவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி பேரணியாகச் சென்றனர். மேலும் பேரணியில் கலந்து கொண்ட பலரும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து கோஷமிட்டவாறு சென்றனர். இதனால் இன்று சென்னையில் பதற்றம் ஏற்பட்டது.
English Summary
Director Pa Ranjith Led The Rally in Chennai Asking Justice For Armstrong Murder