திரௌபதி முர்மு ஜனாதிபதியானால் பாண்டவர்கள் யார்.? பிரபல இயக்குனர் சர்ச்சை கருத்து.!
Director ram gopal Varma speech about Draupadi Murmu
பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு குறித்து பிரபல திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய குடியரசுத் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரான திரவுபதி முர்மு பிரதமர் மோடி முன்னிலையில் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு குறித்து பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இது குறித்து ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒருவேளை திரௌபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் யார்? மற்றும் மிகவும் முக்கியமாக பாண்டவர்கள் யார்?" என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Director ram gopal Varma speech about Draupadi Murmu