பதவியை விட்டுக் கொடுத்து ஏன்.? டி.கே சிவக்குமாரின் பரபரப்பு ட்விட்.! கர்நாடகாவில் அடேங்கப்பா அரசியல்..!!
DKSivakumar tweets about Chief Minister selection
கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டியில் முன்னாள் முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவை வந்தது.
தேர்தல் முடிவு வெளியானதிலிருந்து இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்ததால் பெங்களூரில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவரும் பொதுச் செயலாளர் வி.சி வேணுகோபால் அறிவித்துள்ளார். அதேபோன்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பெங்களூருவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.கே சிவகுமார் "கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நமது மக்கள் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை, அதற்கு உத்தரவாதம் அளிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
English Summary
DKSivakumar tweets about Chief Minister selection