தைப்பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3000.. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.!!
dmdk party 9 resolution
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றி, கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் சேதம் ஏற்பட்டு, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆகையால் மாநில அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 40,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தைப்பொங்கல் தமிழகம் முழுவதும் மக்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம், தமிழக அரசு ஆண்டுதோறும் பரிசுப் பொருட்களும், பணமும் வாடிக்கையாக வழங்கும், அதேபோல் இந்த ஆண்டும் தைப்பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 வழங்க வேண்டும் என்று கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டே இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பள்ளி மாணவிகள், மாதா, பிதா, குர, தெய்வம், என்பார்கள் அந்த குருவே இச்சம்பவத்தில் ஈடூபடூவது மிகப்பெரிய குற்றம், இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கலாம் என்று இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.