#BREAKING || பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த திமுக கடும் எதிர்ப்பு.!
dmk Against Marriage Age bill
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் ’குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021’ மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வந்த நிலையில், பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்வதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், சற்றுமுன் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் ’குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021’ மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி இந்த ’குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021’ மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.
அப்போது, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, "பெண்கள் திருமண வயதை உயர்த்தும் மசோதாவை சிறப்புக்குழு அமைத்து பரிசீலிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி பேசினார்.
English Summary
dmk Against Marriage Age bill