மக்களவை தேர்தல்: இறுதி கட்டத்தை எட்டும் தி.மு.க கூட்டணி தொகுதி பங்கீடு.!
DMK alliance constituency distribution
மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தி.மு.க தீவிரப்படுத்தி வருகிறது. முன்பாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உடன் இன்று நடைபெற உள்ளது.
பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டி.ஆர் பாலு சிபிஐ, சிபிஎம், மதிமுக பிரதிநிதிகள் உடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.
கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை முடிவடைந்து தற்போது மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தையின் இறுதியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
DMK alliance constituency distribution