ஊழல்... ஊழல்...! தி.மு.க திட்டங்கள் கொண்டு வந்து அதில் பெருமளவு கமிஷன் பெற்றுக் கொள்கிறது...! - சசிகலா - Seithipunal
Seithipunal


திருவாரூரில் திருத்துறைப்பூண்டியிலுள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு 'சசிகலா' சாமிதரிசனம் செய்ய வந்தனர்.இவர் சாமி சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்த பிறகு சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சசிகலா:

அப்போது அவர் தெரிவித்ததாவது,"போக்குவரத்துதுறை அமைச்சர் தவறான தகவல்களை தருகிறார். தற்போதைய அரசு பஸ்களில் மக்கள் ஏறுவதற்கே பயப்படுகின்றனர். அரசு பஸ்களின் நிலை மோசமாக தான் உள்ளது.ஆளும் தி.மு.க. அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது.

இவர்கள் திட்டங்களை கொண்டு வந்து அதில் பெருமளவு கமிஷன் பெற்று கொள்கிறார்கள். அப்படி கமிஷன் பெறுவதால் ஒப்பந்ததாரர்களால் அந்த பணியை முடிக்க முடியவில்லை. பேரூராட்சிகளை நகராட்சிகளாக்கும் பணிகளில் இந்த அரசு மிக தீவிரமாக உள்ளது.

பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்றிய பிறகு 3 மடங்கு, 4 மடங்கு வரிகட்டும் நிலை பொதுமக்களுக்கு ஏற்படும்.தி.மு.க. அரசு ஒவ்வொரு பொதுமக்களின் வீட்டை தட்டி வரி வசூலிப்பதிலேயே குறியாக உள்ளது.

சொத்துவரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் தி.மு.க. அரசு உயர்த்திவிட்டது. இதனால் விலைவாசி அதிகமாக உயர்ந்து பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த தி.மு.க. அரசிடம் இருந்து தமிழக மக்களுக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK bringing schemes and getting huge commissions from them Sasikala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->