மீண்டும் அமைச்சராகிறார் மனோ.தங்கராஜ்! நாளை பதவியேற்பு!
DMK Cabinet change now Mano Thangaraj minster
தமிழக அமைச்சரவை சற்று முன்பு மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஆளுநர் மாளிகை விடுத்துள்ள அறிவிப்பின்படி, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளை அமைச்சர்கள் எஸ்எஸ் சிவசங்கர், முத்துசாமி, ஆர்எஸ் ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
இதில், அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கருக்கு சிவசங்கரிடம் மின்சாரத்துறை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் இடம் வனத்துறை மற்றும் காதி துறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ்க்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் பால்வள துறை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary
DMK Cabinet change now Mano Thangaraj minster