அனல் பறக்கும் அரசியல்.. நிர்மலா சீதாராமன் மீது திமுக பரபரப்பு புகார்.!!
DMK complaint in ECI against nirmala sittaraman
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் "நமது கோவிலை அளிக்கக்கூடிய, நமது கோவிலை சுரண்டி தின்னக்கூடிய நமது மதத்தை அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கு எல்லாம் ஏன் ஓட்டு போடுறீங்க" என பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு பலர் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தேர்தல் விதிகளை மீறி பேசியதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட புகார் மனுவில்விதிமுறைகளுக்கு புறம்பாக, தேர்தல் பரப்புரையில் பள்ளி மாணவர்களை பாஜக பயன்படுத்தியது தொடர்பாகவும்;
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
DMK complaint in ECI against nirmala sittaraman