"ஆன்லைன் சூதாட்டம்" வைத்து அரசியல் நாடகம்... திமுகவை ரவுண்டு கட்டிய டாக்டர்.கிருஷ்ணசாமி..!! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு போல ஆன்லைன் சூதாட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது "மாதம் ஒருமுறை மின் அளவீடு செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி தந்துவிட்டு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் திமுக இன்னும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை.

இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பிலும் மற்ற அரசியல் கட்சிகளின் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை காலப்போக்கில் மக்கள் மறந்துவிடுவார்கள் என திமுக நினைப்பது தவறான எண்ணம்.

பல முறைகேடுகளை அரங்கேற்றி நடத்தப்பட்ட ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை ரத்து செய்து மறுதேர்தல் நடத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இல்லை. நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வதை போல் தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய மத்திய அரசு தான் சட்டம் இயற்ற முடியும் என்ற வலுவான காரணத்தை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். அதை சட்டரீதியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மீது குற்றம் சாட்டக்கூடாது" என செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk create political drama with online gambling bill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->