முன்னாள் திமுக எம்.எல்.ஏ மரணம்!  - Seithipunal
Seithipunal


ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ கோதண்டம் (99) வயது மூப்பு காரணமாக காலமானார்.

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏ ஈ.கோதண்டம், கடந்த சில மாதங்களாக வயது மூப்பால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

சிகிச்சைக்காக அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிற்பகல் அவர் மரணம் அடைந்தார். 

அவருக்கு நான்கு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் மகன் கோ.சத்தியமூர்த்தி தற்போது குன்றத்தூர் நகராட்சியின் தலைவராக உள்ளார்.

கோதண்டம் 1989-91 மற்றும் 1996-2001 காலங்களில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர், மேலும் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தும் பொருட்டு வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

இவரது இறுதிச் சடங்கு நாளை (நவம்பர் 13) குன்றத்தூரில் நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Ex MLA Godhandam death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->