திமுக கொடி கம்பம் மோதி விபத்து.. உடைந்த மாணவியின் மூக்கு.! அடங்காத திமுகவினர்.! அலட்சியமாய் ஸ்டாலின்.!
dmk flag hit school girl
தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடிக்கம்பம் மோதியதில், பள்ளி சிறுமி ஒருவர் மூக்கு உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே திமுக கோடி கம்பம் மோதியதால் மூக்கு உடைந்த பள்ளி சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி பகுதியில், திமுக கொடி கம்பங்கள் சாலை ஓரமாக நடப்பட்டிருந்தது. இன்று காலை விஜயா என்ற பெண் தனது மகளை பள்ளியில் கொண்டு கொண்டு செல்ல இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, சாலை ஓரத்தில் இருந்த திமுக கொடி கம்பத்தின் மீது மோதி விபத்தாகியுள்ளது. இதில் பள்ளி சிறுமியின் மூக்குத் தண்டுவடம் உடைந்துள்ளது. உடனடியாக பள்ளி சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, விழுப்புரத்தில் திமுக கொடி கம்பம் நடும்போது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், தற்போது அதே திமுக கொடி கம்பம் காரணமாக சிறுமி பள்ளி சிறுமி ஒருவருக்கு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை ஓரங்களில் கொடி கம்பங்களை நட கூடாது என்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக வீராவேசமாக பேசிய நிலையில், தற்போது ஆளுங்கட்சியான உடன் சாலையோரங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் கருது தெரிவிக்கின்றனர்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் அன்றே ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடுமையான ஒரு எச்சரிக்கையை கொடுத்து இருந்தால் இதுபோல் நடந்து இருக்காது என்றும் கருது தெரிவிக்கின்றனர்.