பன்னி குட்டி.. வட இந்திய மக்களை அசிங்கப்படுத்திய திமுக அமைச்சர் - அண்ணாமலை கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பன்னி குட்டிகளைப் போல் அதிக குழந்தைகளை வட இந்திய மக்கள் பெற்று உள்ளதாக திமுக அமைச்சர் அன்பரசன் பேசியதற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பாக நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில், திமுக அமைச்சர் அன்பரசன், "மத்திய அரசு அறிவுறுத்தியபடி தென்னிந்திய மக்கள் ஒரே ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளனர். ஆனால், வட இந்தியர்கள் பன்னி குட்டிகளைப் போல் அதிக குழந்தைகளை பெற்றதால் மக்கள் தொகை அதிகரித்துள்ளது" என்று பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த வீடியோவை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, அதனை கண்டித்தும் விமர்சித்தும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தொகுதி மறுவரையறை தொடர்பாக நடத்தும் அரசியல் நாடகத்தின்போது, தனது கூட்டணியில் உள்ள இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி (INDIA) கட்சிகளுக்கு திமுக அமைச்சர் அன்பரசனின் இந்த பேச்சை அவர் ஒளிபரப்புவார் என்று நம்புகிறோம்.

திமுக அமைச்சர்கள் கூட்டாக வட இந்திய சகோதர, சகோதரிகளை அவமதிக்கவும், துஷ்பிரயோகம் செய்யவும் திட்டமிட்டிருப்பது போல தெரிகிறது" என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Govt minister Anbarasan North India BJP Annamalai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->