தமிழக உரிமைகள் பறிப்பதை பழனிச்சாமி விரும்புகிறாரா? ஆளுநர் சந்திப்பு குறித்து கனிமொழி விமர்சனம்!
DMK Kanimozhi comments on EPS meeting with Governor RNravi
தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த பரமன்குறிச்சியில் நடைபெற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ரவியை சந்தித்தது குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
இது குறித்து பேசி அவர் "தமிழக ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் ஆளுநர் இடம் அடகு வைக்கப்பட்டிருந்தது. தமிழக உரிமைகளை பறிக்கும் ஆளுநர் செயல்பாடுகளை அதிமுகவினர் பாராட்டுகின்றனர். தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் ஆளுநரின் செயல்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறாரா? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
DMK Kanimozhi comments on EPS meeting with Governor RNravi