ஈரோட்டில் முன்னணி வகிக்கும் திமுக - பாஜகவிற்கு எந்த இடம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார், திமுக சார்பில் பிரகாஷ், பாஜக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். 

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்குத் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போதைய நிலையில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 24,822 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 

இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 17,177 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன் 4,922 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கிய தமாகா வேட்பாளர் விஜயகுமார் 3317 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk leading in erode constituency parliment election 2024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->