அடைப்படை வசதி இல்லாததால் பறிபோன உயிர்கள் தி.மு.க. அரசே முழு பொறுப்பு! விளாசிய அண்ணாமலை!
DMK lost lives due to lack of military facilities The government is fully responsible Vast Annamalai
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழந்தது மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியை காண வந்த மக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதையும், இதனால் ஏற்பட்ட பயங்கரமான நிலையை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக தி.மு.க. அரசு பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையற்ற செயல்பாடே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களின் பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யாமல், அரசின் அலட்சியமான நிர்வாகத்தால் பல உயிர்கள் போனதாகவும், முதல்வர் ஸ்டாலின் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியதுதான் என்றும் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாது, முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பம் மற்றும் சுய விளம்பரத்திற்காக மட்டுமே கவனம் செலுத்தி, பொதுமக்களின் நலனை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
English Summary
DMK lost lives due to lack of military facilities The government is fully responsible Vast Annamalai