திமுக அமைச்சருக்கு நாள் குறித்த நீதிமன்றம்! குற்றச்சாட்டு பதிவு நேரில் ஆஜராக உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்த வழக்கில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது, வருகின்ற 27ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெற உள்ளதாக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2013 ஆம் ஆண்டு திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர் சேட் உள்ளிட்ட ஏழு பேர் மீது வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

சென்னை, திருவான்மியூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டு மனைகளில் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுடைந்ததாக திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

இந்த வழக்கு எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி உள்ளிட்ட ஏழு பேரும் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இதில் ஐ.பெரியசாமி தவிர மற்ற அனைவரின் மீதான வழக்கையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டத்தோடு, வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. 

அப்போது, வருகின்ற 27ஆம் தேதி இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு நடைபெறுவதாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அன்றைய தினம் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister I Periyasamy Case Court order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->