நமக்கு ஓட்டு விழாது... வட மாநிலத்தவர்களை கண்டு பதறும் திமுக..!! - Seithipunal
Seithipunal


திருச்சியில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அமைச்சர் கே.என் நேரு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர் "வட மாநிலத்திலிருந்து நாள்தோறும் 2000 முதல் 3000 குடும்பங்கள் தமிழகத்தில் குடியேறுகின்றன. குறிப்பாக பீகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வேலை வாய்ப்பு தேடி தமிழ்நாடு வருகின்றனர். 

சென்னையில் மட்டும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் குடியேறி வருகின்றனர். இது போன்ற போக்கு நமக்கு மிகப்பெரிய ஆபத்து. தமிழ்நாட்டில் குடியேறும் வட மாநிலத்தவர்கள் நிச்சயம் திமுகவை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் அதையும் முறியடிக்க வேண்டிய பணி நமக்கு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததன் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். அதே போன்று தமிழ்நாடு பெயர் விவகாரத்திலும் உறுதியோடு செயல்பட்டு நம் முதல்வர் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk minister Nerhu said north indians will not vote for DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->