#BREAKING | கைது செய்யப்படுகிறாரா அண்ணாமலை?! குற்றவியல் நடவடிக்கை! சற்றுமுன் பரபரப்பு புகார்!
DMK Minister Side complaint against Annamalai
அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து அவதூறாக பேசியதாக, அண்ணாமலை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, திமுக மற்றும் திமுகவின் முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலினின் தங்கை கனிமொழி மற்றும் தயாநிதி மாறன், கே என் நேரு, அன்பில் மகேஷ், ஜெகத்ரட்சகன், துரைமுருகன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். மொத்தமாக ஒரு லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 2009 ஆம் ஆண்டு 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சிபிஐயிடம் நேரடியாக தான் புகார் அளிக்க உள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கில செய்தி ஊடகவியலாளர் ஒருவரிடம் பேசக்கூடிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில், ஸ்டாலின் மகன் உதயநிதி, ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் சேர்த்து வைத்திருப்பதாகவும், அதனை எப்படி மாட்டிக்கொள்ளாமல் காப்பாற்றுவது என்று முழித்துக் கொண்டிருப்பதாகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகின்ற ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆடியோ குறித்து உண்மை தன்மை இதுவரை வெளிவராத நிலையில், அண்ணாமலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அன்பில் மகேஷ் சார்பாக வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர், அண்ணாமலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே, அண்ணாமலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க திமுக தயங்குவது ஏன்? இதே குற்றச்சாட்டை சாமானியன் சொல்லி இருந்தால் கைது செய்து சிறையில் அடைத்து இருக்க மாடீர்களா? பாஜகவுக்கு திமுக பயம் கொள்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், இந்த புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
English Summary
DMK Minister Side complaint against Annamalai