அரசியலில் பரபரப்பு...! "31 பூத்திலும் 10,000 பேர் ரெடி"... திமுக அமைச்சர் பேசிய வீடியோ வைரல்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று 20 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இந்த நிலையில் திமுக தன் வசம் உள்ள ஆட்சி அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி எல்லா வகையிலும் வெற்றி பெற முயலும் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பதிவில் "திமுக என்பது பண பலத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி பண பலத்தை வைத்து எதை வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி சந்தேகம் இருப்பின் இந்த காணொளியை பார்க்கவும்" என குறிப்பிட்டு திமுக பணிக்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அதில் அமைச்சர் கே.என் நேரு இளங்கோவனிடம் பேசியதாவது "அவன் என்னத்துக்கு தண்டம் ...மந்திரி எல்லாம் கூடாது.. தேவையில்லை. நான் நேத்தே சொல்லிட்டேன்.. எல்லாரும் வந்துடனும் சொல்லிட்டேன்.. மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன் நீங்க அங்க இருங்க..

சொல்லணும் நினைச்சேன் நீ எல்லா மாவட்ட தலைவரையும் கூப்பிட்டு காசு பணம் எல்லாம் குடுக்கனும்.. பிளாட்டினம் மஹாலில் மதியம் எல்லாரையும் கூப்பிட்டு பணம் கொடுத்துட்டு செட்டில் பண்ணிடு... 30, 31, 1ம் தேதிக்குள்ள எல்லாத்தையும் பண்ணி முடிச்சிடனும்... 31 பூத்திலும் 10,000 பேர் ரெடி பண்ணனும்.. நாளைக்கு தலைவர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வாட்ச், பிரியாணி தரப் போறாரு..

இப்ப நான் புறப்பட்டு திருச்சி போய்.. அங்கிருந்து சென்னை போய்... அந்த கூட்டத்தை முடிச்சுட்டு கோயம்புத்தூர் போய் 31ஆம் தேதி ராத்திரி இங்க வந்துருவேன். நான் எல்லாத்தையும் முடிச்சிட்டேன்... பழனி அண்ணா வரதையும், மகேஷ் வந்தா பாப்போம்.. இல்லன்னா நம்மளே பண்ணிடுவோம். நாசர் 5க்கு மேல வேணாம்னு சொல்றான்.. நாசர்னு போட்டா சங்கடப்பட்டு கிடக்கிறான்.. 

இங்க இருக்கிற லோக்கல் ஆளுங்க அண்ணங்கனாலே... விடுதலை சிறுத்தைங்க... அவையெல்லாம் கொடுக்கவில்லையோ பாத்துக்கோங்க.. ஆனா நம்ம  கொடுத்து விடலாம். நான் கொடுத்துட்டேன், செந்தில் பாலாஜியும் கொடுத்துட்டார்.. ஏன் அவன் இங்க உட்கார வைக்கணுமா..?" என பேசியுள்ளார். இந்த உரையாடல் அங்கிருந்த மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK minister talking about money distribution in Erode East byelection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->