ஏ.சி.எஸ் "அல்வா கொடுப்பதில்" ரொம்ப கெட்டிக்காரர்.. பங்கம் செய்த எ.வ வேலு.!!
DMK minister Velu criticized BJP candidate ACShanmugam
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தை கடமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய எ.வவேலு "நம்ம எதிர்த்து போட்டியிடும் ஏ.சி சண்முகம் வேலூரில் ஒரே ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை தடையும் இல்லை.
அந்த அளவுக்கு அவர் மக்களுக்கு பணியாற்றியுள்ளார். ஏ சி சண்முகம் அல்வா கொடுப்பதில் கெட்டிக்காரர். அதனால்தான் அவர் பணியாற்றிய 5 ஆண்டுகளில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை" என விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
DMK minister Velu criticized BJP candidate ACShanmugam