குற்றவாளி திமுக எம்எல்ஏ ஜவாஹிருல்லாவுக்கு ஒரு வருடம் சிறை! கடைசி நேரத்தில் திருப்பம்!
DMK MLA Chennai HC Order
மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறப்பட்ட வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
இதற்காக எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டினை பரிசீலித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது, இதனால் அவரது சிறைத் தண்டனை நிலைப்படுத்தப்பட்டது.
அதே நேரத்தில், ரம்ஜான் நோன்பு காலம் என்பதால், தண்டனை அமலாகும் காலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதன் அடிப்படையில், நீதிபதி ஜவாஹிருல்லாவின் சிறைத் தண்டனையை ஒரு மாதத்துக்கு தள்ளி வைத்திருக்க உத்தரவிட்டார்.