கோரமண்டல் நிறுவனத்தை மூட ஆலோசனை.!! திமுக எம்.பி கலாநிதி தகவல்.! - Seithipunal
Seithipunal


சென்னை எண்ணூர் அருகே அமைந்துள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்பட்டதால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வருகிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டுள்ள பொதுமக்களை திமுக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

அப்போது  வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி "அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மக்கள் அனைவரும் தற்பொழுது நலமுடன் உள்ளார்கள். சிகிச்சைக்கான செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும். கோரமண்டல் நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நிறுவனத்தை மூடுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mp said consultation to close coromandel company has begun


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->