மத்திய அமைச்சருடன் திமுக எம்பி திடீர் சந்திப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடி கட்டணங்களையும் சமீபத்தில் மத்திய பாஜக அரசு உயர்த்தியது. இதனால் அனைத்து வாகன உரிமையாளர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்துள்ளார். 

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் சந்தித்தது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்று‌ (27.07.2023), புதுடெல்லியில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின்‌ கட்கரியைச் சந்தித்து, தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் எனவும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமெனவும் மனு அளித்தேன்" என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP Tamilachi Thangapandian meeting with Union Minister Nitin Gadkari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->