3 நாள் கழித்து விழித்துக்கொண்ட திமுக! இதையே இப்பதான் கண்டுபிடிச்சீங்களா! - Seithipunal
Seithipunal


என்னென்ன வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லாம் இந்தியைத் திணிக்க மத்திய அரசு துடித்து வருவதாக தமிழக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்துவரும் நிலையில், இப்போது ரேடியோ மூலம் ஹிந்தியை மத்திய அரசு இந்தி திணிப்பை புகுத்த முயற்சித்துள்ளது.

அகில இந்திய வானொலி தலைமை அலுவலகத்தின்அறிவிப்பைத் தொடர்ந்து ஆங்கிலச் செய்திகளில் ஆல் இந்திய ரேடியோ என்பதற்கு மாற்றாக  'ஆகாஷ்வாணி' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. 

தமிழ்நாட்டு வானொலி நிலையங்களின் செய்திகளிலும், அறிவிப்புகளிலும் கூட  ஆகாஷ்வாணி என்று அறிவிக்க கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியறிந்த பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்  கடந்த 4 ஆம் தேதியே மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து அறிவிக்கை விடுத்தது உள்ளார்.

அந்த அறிக்கை விவரம் காண : https://www.seithipunal.com/tamilnadu/dr-ramadoss-condemn-to-air-and-central-govt

இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருக்கு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், All India Radio என்ற பயன்பாட்டிற்குப் பதிலாக 'ஆகாஷ்வாணி' எனக் குறிப்பிடுமாறு வானொலி நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது மறைமுக இந்தி திணிப்பு. எனவே, அதற்குப் பதிலாகத் 'அகில இந்திய வானொலி' என்றே தொடர்ந்து பயன்படுத்திட வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP TR Balu condemn to AIR


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->