"வாரிசுகளுக்காக" குவிந்த விருப்ப மனுக்கள்.!! பரபரக்கும் அறிவாலயம்.!!
DMK nomination paper submission behalf of
நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ள வேட்பாளர்களின் விருப்பம் அணுக்கள் இன்று முதல் வரும் மார்ச் 7ஆம் தேதி வரை பெறப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டரின் விருப்பம் அணுக்களை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக துணை பொதுச் செயலாளர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிய வருகிறது.
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி போட்டியிட வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் கனிமொழி பெயரில் விருப்பம் அணுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே என் நேருவின் மகன் அருள்நேரு போட்டியிட வேண்டும் என தற்போது வரை 47 பேர் விருப்பம் அணுக்கள் தாக்கல் செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக வாரிசுகளின் பெயரில் விருப்ப மனுக்கள் குவிய தொடங்கியுள்ளதாக அறிவாலயத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
English Summary
DMK nomination paper submission behalf of