அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்! 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக தரப்பில் நோட்டீஸ்!  - Seithipunal
Seithipunal


திமுகவினர் சொத்து பட்டியல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வக்கீல் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

சொத்து பட்டியல் வெளியீடு தொடர்பாக அண்ணாமலை இணையத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என்றும், திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானவரித்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் திமுகவின் சொத்துக்கள், கடன் விவரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், புகாரில் தெரிவித்தது போல் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும், குற்றச்சாட்டுகளுக்கு இழப்பீடாக 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்ணாமலை இடம் இருக்கும் ஆடுகள், ரபேல் கடிகாரம் பாஜகவின் சொத்தாக மாறுமா? திமுகவின் திமுக உறுப்பினரின் சொத்துக்கள், நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது. தேர்தல் பத்திரம் மூலம் 5270 கோடி ரூபாய் பாஜகவிற்கு கிடைத்ததை முறைகேடான வழியில் பெற்றது என கருத முடியுமா? என்ற குறுக்கு கேள்விகளையும் அந்த நோட்டீஸில் ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Notice issue to Annamalai BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->