தலைவரை சந்திக்க வர வேண்டாம்.!! திமுக தலைமை கட்டாய உத்தரவு.!!
dmk orders not to come to greet Stalin on New Year
நாளை மறுநாள் உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் திமுக தலைமை தனது கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது . அதில் "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கட்டாயம் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
dmk orders not to come to greet Stalin on New Year