திமுகவை பார்த்து அதிமுகவினருக்கு வயித்தெரிச்சல்..!! அதிமுகவை சீண்டும் அமைச்சர் பெரியகருப்பன்...!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான புதிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்க நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "அரசு திட்டங்களை நிறைவேற்றும் போது சில நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். அதனை முதலமைச்சரின் ஆலோசனை பெற்று தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கருணாநிதியை போல் பேச்சாற்றலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல் நிர்வாக திறமையும் என அனைத்து தகுதிகளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உண்டு. தகுதியும் திறமையும் இருந்த காரணத்தால் மட்டுமே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

வாரிசு என்று சொல்லிக்கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது. உதயநிதி அமைச்சரானதை கண்டு வாரிசு இல்லாதவர்கள் புலம்புகின்றனர். அதிமுக 4 அணிகளாக பிரிந்துள்ளன. அங்கும் அதிமுகவின் தலைமைக்கு அடுத்த வாரிசு யார் என்ற போட்டி நிலவுகிறது. அதிமுகவினர் திமுகவை பார்த்து வயித்தெரிச்சலில் உள்ளனர்" என அமைச்சர் பெரியகருப்பன் பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK PeriyaKaruppan criticized AIADMK on succession politics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->