தவெக-வை பகிரங்கமாக அட்டாக் செய்த திமுக!...நடிகர் விஜய் நடித்த வி.சாலை குட் பிலிம்!...100 நாள் திரையரங்கில் ஓடும் என்று திமுக தாக்கு! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்றினார். இந்த நிலையில் விஜய்யின் இந்த மாநாடு தொடர்பாக,  திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளதாவது, உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன் என்றும், குட் பிலிம் என்று விமர்சித்துள்ளார். மேலும் விஜய் நடித்த வி.சாலை திரைப்படம் 100 நாள் திரையரங்கிளும், OTT யில் கொஞ்சநாளும் ஓடும் என்றும்,
வாழ்த்துகள் விஜய் என்று கிண்டலாக கூறியுள்ளார்.

இதற்கிடையே, புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  விஜய் ஏ டீமும் இல்லை, பி டீமும் இல்லை என்று கூறிய அவர், விஜய் பாஜகவின் சி டீம் என்று கூறினார். மேலும் பேசிய அவர், நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு என்று விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk publicly attacked tvk vijay starrer v road is a good film dmk attacks that it will run for 100 days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->