அண்ணாமலை போராட்டம்.. அது கோமாளிகள் போராட்டம் - அமைச்சர் செந்தில்பாலாஜி அட்டாக்!
DMK senthil balaji BJP Protest
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உறுதிப்பத்திரங்களை வழங்கினார். பின்னர் நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தாவது,
தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லை!
மின்சார தேவையை முன்னிட்டு 7000 மெகாவாட் புதிய தெர்மல் பிளாண்டுகள், 14,000 மெகாவாட் மின்சார உற்பத்தி மற்றும் 2000 மெகாவாட் பேட்டரி சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2030 வரை எந்த பிரச்சனையும் இருக்காது.
மின்தடை – உடனடி தீர்வு!
சில இடங்களில் பழுதால் ஏற்பட்ட தடை உடனே சரிசெய்யப்படும். பொதுமக்கள் உடனடி புகார் தெரிவித்தால், மின்சார வாரிய ஊழியர்கள் விரைந்து சரிசெய்வார்கள். இதற்காக புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பு – தமிழகத்திற்கு அநீதி!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில முதல்வர்கள், அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசித்து, இதை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவார்.
"கோமாளிகள்" போராட்டம்!
இன்றைய போராட்டம் தொடர்பாக கேட்டிருந்தால், "அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேச முடியாது. கோமாளிகள் செயல்களுக்கு பதில் கூற தேவையில்லை" என அமைச்சர் பதிலளித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவையில்!
கோவை வனத்துறை கல்லூரியில் ₹108 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கவிழா மற்றும் ₹67 கோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 39,494 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
English Summary
DMK senthil balaji BJP Protest