அட பாவமே!!! செல்போன் சார்ஜரால் வந்த வினை!!! மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி....!
schoolgirl died of cell phone charger electrocution
சென்னை மாநகரத்தில் எர்ணாவூரில் முகுந்தன் என்பவரின் மகள், 14 வயதான அனிதா என்பவர்.இவர் பள்ளி படிக்கும் சிறுமி.
இவர் தன் வீட்டில் எதார்த்தமாக ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்டு இருக்கிறார்.அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.இதைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சற்றும் தாமதிக்காமல் அனிதாவை உடனடியாக சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சேர்த்தனர்.
இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் கதறி அழுதனர்.
மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
schoolgirl died of cell phone charger electrocution