அதிமுகவின் கோட்டையை தகர்த்த திமுக.. அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்.!!
dmk win for edappadi
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதுவரை திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியை அதிமுக கைப்பற்றியுள்ளது. எடப்பாடி நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில் 17 வார்டுகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது. 11 வார்டுகளில் மட்டும் அதிமுக வெற்றிபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி நகராட்சி மற்றும் தரங்கம்பாடி, குத்தாலம், மணல்மேடு, வைதீஸ்வரன் கோயில் பேரூராட்சி ஆகிய அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் விக்ரமசிங்கபுரம் நகராட்சிகளில் தலா 8 இடங்கள் என 16 இடங்களில் போட்டியிட்ட பாஜக 14 இடங்களில் டெபாசிட்டை இழந்தது.
மதுரை பேரையூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 9, காங்கிரஸ் 5 மற்றும் சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், திமுக 22, அதிமுக 9 மற்றும் காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.