ஈரோட்டில் பெரும் பரபரப்பு! நாதக - பெரியார் கட்சியினர் மோதல்!  - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து தெரிவித்து வரும் கருத்துக்கள் சர்ச்சை ஆகி வருகிறது.

சீமானை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் சீமானுக்கு எதிராக பெரியார் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சீமானுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சியினருக்கும், தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சீமானுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் துண்டு பிரசுரங்கள் விநியோத்த போது, அதே பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்தில் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode East NTK TPK clash


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->