நகர்ப்புற உள்ளாட்சிகளின் பகுதி சபை, வார்டு சபைகளுக்கு நிதி அதிகாரம் வேண்டும் -  மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


நகர்ப்புற உள்ளாட்சிகளின் பகுதி சபை, வார்டு சபைகளுக்கு  நிதி அதிகாரம் வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், பகுதி சபை, வார்டு சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 

உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையிலும் https://bit.ly/UrbanPMK, அதன்பின்  16.2.2022 முகநூல் பதிவிலும் பா.ம.க. வலியுறுத்தியிருந்தது நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டின் நகரங்களில் ஏரியா சபைகள் & வார்டு குழுக்களை அமைக்கும் சட்டம் (Tamil Nadu Municipal amendment Act) 2010-லேயே கொண்டுவரப்பட்டது. ஆனால், அதனை செயல்படுத்தும் விதிகளை 11 ஆண்டுகள் கடந்தும் வெளியிடவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக விதிகளை வெளியிட வேண்டும். 

பெங்களூருவில் வார்டுக்கான திட்டங்களை வார்டு குழுக்களே தீர்மானிக்கின்றன.  அதைப்போலவே, தமிழ்நாட்டின் ஏரியா சபைகளும்,  வார்டு சபைகளும் அவற்றின் பகுதிக்கு தேவையான மக்கள் நலப் பணிகளை தாமே தேர்ந்தெடுத்து செயல்படுத்துவதற்கான நிதி அதிகாரத்தையும் கொண்டிருக்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say Local Ward Power


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->