அப்படியா!!! தீ விபத்தால் கையும் களவுமாக சிக்கிய நீதிபதி..!!கட்டு கட்டாக பணம் நீதிபதியின் வீட்டில் கண்டுபிடிப்பு...!
Judge caught red handed fire accident bundle money found Judge house
'யஷ்வந்த் வர்மா' என்பவர் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக செயல்பட்டு வந்தவர். இவர் டெல்லியிலுள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கடந்த மாதம் ஹோலி பண்டிகையின்போது திடீரென தீ விபத்து யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் ஏற்பட்டது.

அப்போது யஷ்வந்த் வர்மா வெளியூர் பயணம் சென்ற நிலையில் அவரது குடும்பத்தினர் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இந்தத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் வீட்டில் எரிந்த தீயை அணைந்தனர்.
அந்நேரம், நீதிபதியின் வீட்டிலுள்ள பல்வேறு அறைகளில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டு தீயணைப்பு வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.இந்த தீ விபத்தின்போது கட்டு கட்டாக பணம், எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்விவகாரம் பூதாகாரமான நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி ஐகோர்ட்டிலிருந்து அலகாபாத் ஐகோர்ட்டிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனிடையே,இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றார். நீதிபதியாக பதவியேற்றபோதும் வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணை தொடர்பாக அக்குழு அறிக்கை சமர்பிக்கும்வரை யஷ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்க மாட்டார் என்றும் அவருக்கு நீதிமன்ற பணிகள் ஒதுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் செய்தி தற்போது பரவலாக மக்களை நடுவே பேசப்பட்டு வருகிறது.
English Summary
Judge caught red handed fire accident bundle money found Judge house