கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக் கொலை..!!
indian people murder in canada
கனடா நாட்டில் உள்ள ஒட்டாவா நகரின் அருகே ராக்லேண்ட் பகுதியில் இந்திய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மர்ம நபரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகம் தெரிவித்துள்ளதாவது:- "கத்தி குத்து தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியான சோக சம்பவத்திற்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்.
சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர். எனினும், பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காணப்படவில்லை.

இந்த சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்தினருக்கு, உள்ளூர் கூட்டமைப்பு வழியே சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் வழங்க, நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடக்க நிலையிலேயே உள்ளது. அதிகாரபூர்வமாக வெளியிடுவதற்கு வேறு எந்த தகவலும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
indian people murder in canada