வெளியான மரண செய்தி., மிகுந்த வேதனையில் மருத்துவர் இராமதாஸ்.!
Dr Ramadoss Mourning to Kottupalaiyam ShanmukaSundram
கொட்டுப்பாளையம் சண்முகசுந்தரம் மறைவுக்கு, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது, "மயிலாடுதுறை மாவட்டம் கொட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வன்னியர் சங்க முன்னோடி சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
சண்முகசுந்தரம் மயிலாடுதுறை பகுதி மக்களின் மரியாதையைப் பெற்றவர். அப்பகுதி மக்களால் நேசிக்கப்பட்டவர். 1980-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து என்னுடன் இணைந்து பணியாற்றியவர்.
வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். என் மீது மிகுந்த மரியாதை கொண்ட அவர், அவரது இறுதி மூச்சு வரை பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தவர்.
சண்முகசுந்தரத்தை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Dr Ramadoss Mourning to Kottupalaiyam ShanmukaSundram