தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவு - பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவரின் அந்த இரங்கல் செய்தியில், "தமிழ்நாட்டின் முதுபெரும் தமிழறிஞர்களில் ஒருவரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள்  துணைவேந்தருமான அவ்வை நடராசன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தமிழ் வளர்ச்சிக்கும், கல்விக்கும் மிகச் சிறந்த பங்காற்றியவர் அவ்வை நடராசன். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியிருக்கிறார். அரசின் சார்பிலும், அரசியல் கட்சிகளின் சார்பிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பெரும்பான்மையான முன்னெடுப்புகளில் பங்களித்தவர் நடராசன்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு  ஆதரவையும், ஆலோசனைகளையும் அவ்வை நடராசன் வழங்கியுள்ளார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை, பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றம் ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். என் மீதும், பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ் வளர்ச்சிக்கான பணிகள் மீதும் மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டவர் அவ்வை நடராசன் ஆவார்.

தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வளர்கள், கல்விச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று மருத்துறவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Mourning to Nadarasan Death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->