கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு  மருத்துவர் இராமதாஸ் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும், பாடலாசிரியரும், கவிஞருமான புலமைப்பித்தன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86 ஆகும். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வெளிக்குகின்றனர்.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது, "அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரும், தமிழுணர்வு கொண்ட கவிஞருமான புலவர் புலமைப் பித்தன் உடலநலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அதிமுகவை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவரான புலமைப்பித்தன் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இப்போது வரை நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியவர். தமது பாடல்களில் தமிழை வீழச் செய்யாமல் வாழ வைத்தவர். அதனால் புலவர் புலமைப்பித்தனை எனக்கு பிடிக்கும். அதையும் கடந்து ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டவர். அதற்காக பல முன்முயற்சிகளை மேற்கொண்டவர் புலமைப்பித்தன்.

புலமைப்பித்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss mourning to pulamaipithan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->