ரூ.1000 மாத ஊக்கத்தொகை விவகாரம் - தமிழக அரசை வலியுறுத்தும் மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று,  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வலியுறுத்தல்

இதுகுறித்த இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் கற்பித்தல் தன்னார்வலர்களாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.1000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்தக் குற்றச்சாட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. 

மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. வேறு வேலை செய்யாத  பலருக்கு அது தான் வாழ்வாதாரம்.  அதையும் குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது நியாயமல்ல!

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் செய்வது சேவை ஆகும். அவர்களில் சுமார் 11 ஆயிரம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது.  அவர்களுக்கு  உடனடியாக ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Illam thedi kalvi thittam staffs issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->